சிறு குன்றில் இருக்கும் ஆசிரமத்திற்கு நீர் மோண்டு வருமாறு தனது சிஷ்யனைப் பணிக்கிறார் குரு.
அங்கு இருப்பது ஒரு பழைய அழுக்குப்பிடித்த பிரம்புக்கூடை. சிஷ்யன் நீரை மொண்டு மேலே வருவதற்குள் நீரெல்லாம் வடிந்துவிடும்.
குரு சொல்கிறாரே என்று இவனும் விடாமல் தினமும் செய்து வந்தான். ஒரு சொட்டு தண்ணீர் மேலே நிரம்பவில்லை.
வெறுத்துப் போய் ஒருநாள் குருவிடம் சொன்னான், இந்த ஓட்டைக்கூடையைக் கொடுத்து என்னை ஏன் வதைக்கிறீர்கள். மேலே ஒரு சொட்டு தண்ணீர் என்னால்
கொண்டுவர முடியவில்லையே என்று.
குரு சிரித்துக்கொண்டே சொன்னாராம். உண்மைதான் தண்ணீர் மேலே வரவில்லை. அதற்குப்பதில் என்ன நடந்திருக்கிறது என்று கவனித்தாயா? என்று சொல்லி,
1. முதலில் கூடையைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். அழுக்கெல்லாம் போய் கூடை புதுகூடை போல் பொலிவுடன் இருந்திருக்கிறது.
2. இவன் தினம் தண்ணீர் கொண்டுவரும் போது தன்னையறியாமலே வழியில் உள்ள நந்தவனத்திற்கு நீர் சொரிந்திருக்கிறான். அவை பூத்துக்குலுங்கி இருந்தன.
இதுதான் பலன்.