1. எந்த ஒரு கலைப்படைப்பிலும் இருக்கும் இரண்டு முக்கியமான விஷயங்கள் : அ. உருவம் (form) ஆ. உள்ளடக்கம் (Content) 2. உருவம் என்பது என்ன வடிவில் அந்த படைப்பு படைக்கப்படுகிறது. உருவம் தான் அவருடைய ஆற்றலை, அந்த கலையின் மீது அவருக்கிருக்கும் ஆளுமையை காட்டுகிறது (ஒரு எழுத்தாளருக்கு மொழி ஆளுமையை போல).
3. உள்ளடக்கம் என்பது என்ன பொருளை என்ன கருத்தை சொல்கிறது. உள்ளடக்கம் ஒரு படைப்பாளியின் சார்புகளை, அவர் படைக்கும் படைப்பின் மீதிருக்கும் அவர் பார்வையை காட்டுகிறது.
4. ஒரு சிறு கதையை அல்லது நாவலை படமாக்கும் போது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே எடுத்து படமாக்க வேண்டும், அந்த படைப்பின் உருவத்தை எடுக்கக்கூடாது.
5. ஒரு படைப்பை படமாக்க முதல் தேவை எந்த விஷயம் அந்த படைப்பை உருவாக்க படைப்பாளியை தூண்டியது அதை உணர வேண்டும். (We should understand/Feel the point which triggered the author to write that story and we should start from there)
6. எழுதிய எல்லாவற்றையும் அப்படியே படமாக்க முடியாது. எழுத்தில் கிடைக்கும் சில பரவசங்களை காட்சிகளாக்க முடியாது. உதாரணமாக சுஜாதா ஒரு கதையில் “வீட்டில் இருப்பவரிடம் பிணங்கிகொண்டு பின்புறம் முகத்தை தொங்கப்போட்டு அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியை போல் அந்த வீடு மற்ற வீடுகளில் இருந்து தனித்திருந்தது” என்கிறார்

இதை அப்படியே யாராலும் படமாக்க முடியாது. ஒரு எழுத்தில் கிடைக்கும் பரவசம் படிப்பவரின் கற்பனையை பொறுத்து மாறுகிறது (படிப்பவரை co-creator என்கிறார்). இது படத்தில் சாத்தியமில்லை. எழுத்தில் சிலவற்றை படிப்பவரின் கற்பனைக்கு விட்டு விடலாம், படங்களில் அப்படியில்லை. 7. நான் ஒரு போதும் ஒரு படைப்பாளியின் Master Piece ஐ தொட மாட்டேன்.
8. ஒரு படைப்பு சாக வரம் பெறுவது காலத்தின் கையில் இருக்கிறது.
9. நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வரும் பாட்டி வடை சுட்ட கதை ஒரு Master Piece. பல லட்சம் குழந்தைகள் கேட்ட, கேட்டு கொண்டிருக்கும், கேட்க போகும் கதை. (முதன் முதலில் இதை சொன்னவர் யாரோ?)
10. ஒரு படைப்பாளியை அவருடைய சிறந்த படைப்பை வைத்து எடைபோட வேண்டும். (Judge a creator by his master piece).
11. ஒரு கதையை படமாக்கும் முன், அதன் உள்ளடக்கத்தை மட்டும் (Synopsis) எடுத்துக்கொள்ள வேண்டும், அது வரைக்கும் தான் அந்த கதைக்கும் நமக்குமான தொடர்பு, பிறகு நமது படைப்பாற்றலை வைத்து அதற்கு உருவம் கொடுக்க வேண்டும். இந்த ஊடகமாற்றத்திற்கு நமது படைப்பாற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்கான சுதந்திரத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், அதன் மூலத்தில் இருப்பதுபோல் அப்படியே இருக்க வேண்டிய அவசியமில்லை.
12. தமிழ் திரையுலகில் கதாசிரியருக்கு பெரிய பஞ்சம் இருக்கிறது.
பாலு மகேந்திராவைக் கேளுங்கள்…..

கேள்வி: நீங்கள் இப்போது பரிந்துரைக்கும் புத்தகம்?
பாலு: மாலனின் சிறுகதைகள்.
கேள்வி: உங்களின் படைப்புகளில் சிறந்ததாக நீங்கள் கருதுவது?
பாலு: வீடு, சந்தியா ராகம் (இந்த இரு படத்திருக்கும் இப்போது நெகடிவ் இல்லையாம்)
கேள்வி: உங்களின் படைப்புகளில் மோசமானதாக நீங்கள் கருதுவது?
பாலு: நீங்கள் கேட்டவை.
கேள்வி: நீங்கள் பார்த்தவைகளில் சிறப்பாக படமாக்கப்பட்ட நாவல்?
பாலு: பதேர் பாஞ்சலி.