நீங்கள் இருக்கின்ற சூழலுக்கு ஏற்ப உங்கள் நடத்தை உங்கள் மனம் மாறுகின்றதை நீங்கள் உங்களை கவனிக்கும் போது அறிந்து கொள்ள இயலுகிறதல்லவா?
பிரபலமான ஜென் கதை ஒன்று.
ஒரு துறவி ஒருவர் காட்டில் தவம் இயற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது அமைதியான சூழல் அவர் வாழ்ந்து வரும் பகுதி முழுவதும் பரவி விரிந்திருந்தது. அப்பகுதிக்குள் வருகின்ற விலங்குகள்கூட ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாமல் அமைதியாக இருந்தன.
இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் இவரது சூழ்நிலையை கெடுக்க விரும்பி அதற்காக திட்டமிட்டனர்.
அத்தகைய தீய எண்ணம் கொண்ட ஒருவன் இளவரசர் வேடம் அணிந்து, ஓர் அழகிய வாள் ஒன்றை எடுத்து கொண்டு, அம்முனிவரின் குடிசைக்குள் வந்தான். முனிவரை வணங்கிவிட்டு “முனிவரே இந்த வாள் இங்கு இருக்கட்டும், நான் அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வந்து எடுத்துக் கொள்கிறேன்”, எனக் கூறிவிட்டு வெளியேறினான்.
நேரம் சென்று கொண்டே இருந்து. துறவி குளிக்கச் சென்ற இளவரசை காணவில்லையே என பார்த்தார். அவன் வரவேயில்லை.
சில நாட்கள் சென்றன. முனிவரின் பார்வையில் அந்த வாள் அடிக்கடி பட்டது. அது மிகவும் அழகாக இருந்தது. ஒரு நாள் முனிவர் அந்த வாளை எடுத்து கவனித்துப் பார்த்தார். அது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை கையில் அப்படியும், இப்படியும் சுழற்றிப் பார்த்தார். போரிடுவதைப் போல வாளை அப்படியும், இப்படியும் சுழற்றிப் பார்த்தார். போரிடுவதைப்போல வாளை கையில் சுழற்றினார். அவரது செயலைப் பார்த்த பறவைகளும், விலங்குகளும் அங்கிருந்து அகன்றன.
எதிரிகள் நினைத்தது நடந்துவிட்டது.
நாம் விரும்பியவாறு சூழலை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழுகின்ற மோசமான சூழலுக்கு அடிமையாகி விடுவோம்.
விரும்பிய சூழலுக்கு செல்வது என்பது, கிணற்றிலிருந்து கடலுக்கு செல்வதைப் போல, பல ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கலாம். நீங்கள் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடைபெறலாம். அனைத்தும் இருந்தாலும நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகளும், வெற்றிகளும் அங்கே அதிகமாக உள்ளது.
உங்கள் சூழ்நிலையை மாற்றிக கொள்ளுங்கள், நீங்கள் விரும்பியவாறு மாறலாம், வெற்றி பெறலாம்.