ஒரு ஜென் கதை.
ஒரு ஜென் ஞானி, ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்து எதிரே தெரிகிற மலையையும், வானத்தையும் பார்த்துக் கொண்டே இருப்பார். தினமும் அவர் மௌனமாக, இப்படி பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தவர்கள், ஆவலை அடக்க மாட்டாமல் அவரிடமே கேட்டு விட்டார்கள்:
“அங்கே என்ன தான் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
“அங்கே பாருங்கள், வானத்தில் மேகத்திரள் இருக்கிறதல்லவா, ஓரிடத்தில் திரளாக, இன்னோரிடத்தில் அங்கே ஒன்று, இங்கே ஒன்று என்றிருக்கிறதல்லவா, அதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” அந்த ஜென் துறவி அமைதியாகச் சொன்னார், மறுபடி மேகங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். கேள்வி கேட்டவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு கேள்வி கேட்டார்கள்.
“வானத்தில் மேகங்கள் காணப் படுவது இயற்கை தானே, இதில் என்ன அதிசயம் இருக்கிறது?”
“அங்கே பாருங்கள், கூட்டமாக இருந்த மேகத்திரள், காற்று வீச வீச, அப்படியே கலைந்து கடந்து போகிறதல்லவா? ஆனால், மலை அங்கேயே, அப்படியே தான் இருக்கிறது. அது போலவே, நமக்குள் எண்ணங்களும் ஒருசமயம், கூட்டமாகவும் இன்னொரு சமயம் தனியாகவும் வருகிறதல்லவா? இதுவும் அந்த மேகத்தைப் போலவே கடந்தும் போகிறதல்லவா? அதைத் தான், உள்ளேயும் பார்த்துக் கொண்டிருந்தேன்.”
ஞானியின் இந்த பதில் சிலபேருக்குப் புரிந்தது. பல பேருக்குப் புரியவில்லை. மறுபடி, மறுபடி கேள்வி கேட்டார்கள். ஞானி மூன்றே வார்த்தைகளில் சொன்னார்:
“இதுவும் கடந்து போகும்.”