Dec 6, 2010

ஆன்மீகம்

ஏன் தியானம் தேவை?

கடந்த காலத்தில் உலகம் மிகவும் வேறுவிதமாக இருந்தது என்பது வெளிப்படை. அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஆறுவாரங்களில் ஏற்பட்டிருக்கும் புலன் உணர்ச்சி தூண்டுதல்கள் மொத்தமும் இன்று ஒரே நாளில் நமக்கு ஏற்படுகின்றன.
கற்பதும், பின்பற்றுவதுமான நெருக்கடி நம்மீது சுமார் 40 மடங்கு அதிகரித்திருக்கிறது. முன் எப்போதும் மனிதர்கள் கற்க முடிந்ததை விடவும் அதிக அளவில் கற்க கூடியவராக நவீன மனிதர் ஆகியிருக்கிறார்.
கடந்த காலத்தில் மனிதர் நிறைய கற்க வேண்டும் என்ற பிரச்சனையே இருக்கவில்லை. ஓரளவு கற்றாலே போதுமானதாய் இருந்த்து. அதுபோக மீதி இடம் உங்கள் மனதில் ஏதுமற்ற காலி இடமாகவே இருந்தது. இதனால் மக்கள் இயல்பாகவே அமைதியாக, ஆன்ந்தமாக, ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
நவீன மனிதன் இறுக்கமடைந்துவிட்டான். தியானத்தின் மூலமாக மட்டுமே அவன் புத்துணர்வும், புதுப்பொலிவையும் அடைய முடியும். ஒரு குழந்தையாக மாறமுடியும்.



பழைய சன்னியாசம் வாழ்வை மறுப்பது.நான் வாழ்வை நேசிப்பதாக அதை ஆக்கியிருக்கிறேன்.அதே சன்னியாசம்தான்,அதே தேடல்தான்.அதை மேலும் வளமானதாக நான் மாற்றியிருக்கிறேன்.உலகின் மேல்,நிலை கொண்டதாக மாற்றியிருக்கிறேன்.காரணம் என் உபதேசமே, உலகில் இரு.உலகத்தினுடையதாக இருக்காதே என்பதுதான்.
உலகை துறக்க வேண்டிய அவசியமே இல்லை.கோழைகளே அதை துறப்பார்கள்.உலகில் வாழ வேண்டும்.அனுபவம் பெற வேண்டும்.இது ஒரு பள்ளி.நீங்கள் இமயமலையில் வளர முடியாது.உலகில்தான் வளர முடியும்.
ஒவ்வொரு காலடி வைப்பும் ஒரு தேர்வு.நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சோதனை.வாழ்வு ஒரு வாய்ப்பு.
உண்மை,உயிருள்ள உண்மை,ஒவ்வொரு தனி மனிதராலும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.யாராலும்,அதை உங்களுக்கு வழங்க முடியாது.
ஆனால் அதை சாதித்தவர்,உங்களுக்குள் ஒரு தாகத்தை தூண்டிவிடலாம்.மிக பெரிய ஆசை,அதற்காக தோன்றும் படி தூண்டிவிடலாம்.உண்மையை என்னால் உங்களுக்கு வழங்க முடியாது.ஆனால்,அதற்கான ஆசையை வழங்க முடியும்.
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.தேடல் தொடரும்.
எப்போதுஉறங்கப் போகுமுன்
முதல் படிதிரும்பிப்பார் அன்றைய தினத்தின் எல்லா நினைவுகளுக்குள்ளும் திரும்ப சென்று பார். காலையில் இருந்து ஆரம்பிக்காதே. எங்கிருக்கிறாயோ, அங்கிருந்து, படுக்கையிலிருந்து ஆரம்பி. கடைசி செயல், பின் அதற்கு முந்தினது, பின் அதற்கு முந்தினது, படிப்படியாக காலையில் செய்த முதல் செயல் வரை திரும்ப சென்று பார். அதனுடன் உன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதில்லை என்பதை தொடர்ந்து நினைவில் கொண்டபடி அன்றைய நாளின் நிகழ்ச்சிகளை பின்னால் சென்று பார்.
உதாரணத்துக்கு ஒருவர் உன்னை கோபப்படுத்தினார், நீ அவமானப்பட்டதாக உணர்ந்தாய், இப்போது ஒரு பார்வையாளனாக மட்டும் இரு. அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதே. கோபப்பட்டு விடாதே. அது நிகழ்ந்தால் நீ அதனுடன் இணைந்து விடுவாய். தியானம் செய்கிறோம் என்பதையே தவற விட்டு விடுவாய். அந்த மனிதர் உன்னை அவமதிக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் உள்ள வடிவம் உன்னுடையதுதான். ஆனால் அந்த வடிவம் இப்போது இல்லை. நீ நதி போல ஓடிக் கொண்டிருக்கிறாய். வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பருவத்தில் உன்னிடமிருந்த அந்த வடிவம் இப்போது உன்னிடத்தில் இல்லை. அது போய்விட்டது. நதி போல தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறாய்.
காலை எழுந்தவுடன் செய்த முதல் செயல்வரை திரும்ப சென்று பார்த்துவிட்டால் காலை எழுந்த உடன் இருப்பது போன்ற புத்துணர்வை நீ திரும்ப பெறுவாய். பின் ஒரு சிறு குழந்தை போல நீ உறங்கிவிடலாம்.
இது ஒரு ஆழமான தூய்மை படுத்துதல். இதை உன்னால் தினமும் செய்ய முடிந்தால் ஒரு புது இளமை, ஒரு புத்துணர்ச்சி உன்னுள் வருவதை நீ உணரலாம். இதை நாம் தினமும் செய்ய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தங்களது கடந்தகாலத்தை சுமந்துகொண்டு திரிய மாட்டார்கள். அவர்கள் எப்போதும் இங்கே இப்போது இருப்பார்கள். எதுவும் விடுபட்டுவிடாது. கடந்தகாலத்திலிருந்து எதுவும் சுமையாக மாறாது