Nov 29, 2010

ஹைகூ கவிதைகள்!

பூமியின் கூடாரம்
பட்டெனக் கிழிந்தது!
மின்னல்!

சந்தை
இரைச்சலிலும்
தனியாய்க் கேட்கிறது
(அவளது)
வளையோசை.

 மின் வெட்டு
புத்தகத்தை மூடிவிட்டு
மழையைக் கவனித்தேன்!

இலையுதிர் காலத்தில்
இந்தப் பாதையில்
யாரும் செல்வதில்லை
என்னைத் தவிர!

காட்டு மரங்களிடையே
மின்னல் காட்டிய
தண்ணீரைப் பார்த்துவிட்டேன்!

பால்கூடக் கசந்தது
மாடு விற்ற பணத்தில்
குடித்தபோது!

மேகங்கள் தோன்றி
நிலவையே பார்ப்பதிலிருந்து
ஒய்வு தருகின்றன.