Nov 5, 2010

படித்ததில் பிடித்தது!

கடைசிப் பக்கங்கள்
கிழிந்துபோன
துப்பறியும் நாவலை
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா?
அதுதான் வாழ்க்கை!


எங்கள் இருவருக்குமே எதுவும் தெரியாது என்றாலும், நான் பரவாயில்லை.
அவன் தெரியாமல், தெரிந்ததாகச் சொல்கிறான். நான் தெரியாமல்,
தெரியவில்லை என்று சொல்கிறேன்.


இன்றைக்கு இருக்கும் நிலையில்!
யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை!
என்பது முக்கியமான வித்தியாசம் இல்லை.
யார் அக்கறைப்படுகிறார்கள்!
யார் அக்கறைப்படவில்லை!
என்பதே முக்கியமானது.


'தவறுகளுக்காக அவமானப்பட்டால்,
அவற்றைக் குற்றங்களாக்கிவிடுவீர்கள்!'



ஒரு நல்ல மனிதன்
யார் மனதையும்
புண்படுத்த மாட்டான்.
காரணமில்லாமல்!